உலக பொருளாதார மன்றத்தில் சிறப்பு உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடுத்த வாரம் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் “சிறப்பு உரையை” வழங்குவார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த ஆண்டு, சுவிஸ் ஆல்ப்ஸில் ஜனவரி 15 மற்றும் 19 க்கு இடையில் நடைபெறும் வருடாந்திர மன்றம், “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.
இதில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், அர்ஜென்டினாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, ஜேவியர் மிலே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உட்பட ஏராளமான உலகத் தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் கலந்துகொள்வார்கள்.
(Visited 5 times, 1 visits today)