விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறும் வீரர்கள்! சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு

2022ம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்திய அணியையும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் தோற்கடித்து இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது.

இந்நிலையில், ஜோஸ் பட்லரின் தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆல்-ரவுண்டர் டாம் ஹார்ட்லி போன்ற வீரர்கள் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், தற்போது ஐபிஎல் 2024ல் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்களை நாட்டிற்கு திரும்பமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வரும் மே 22 ஆம் திகதி ஹெடிங்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. “தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் 22 மே 2024 அன்று ஹெடிங்லியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான நாடு திரும்ப உள்ளனர்” ECB தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக முக்கிய வீரர்கள் பிளேஆஃப்களில் விளையாட முடியாமல் போகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பில் சால்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொயீன் அலி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் குர்ரன் போன்ற வீரர்கள் ஐபிஎல்லை விட்டு பாதியில் விலகுகின்றனர்.

இந்த வீரர்கள் அவர்களது ஐபிஎல் அணிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பில் சால்ட் கொல்கத்தா அணிக்கு முக்கியமான ஓப்பனிங் வீரராக இருந்து வருகிறது. சமீபத்தில் பார்மிற்கு திரும்பிய ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணி முக்கிய சக்தியாக உள்ளார்.

மேலும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் இங்கிலாந்து வீரர்கள் இல்லாமல் சிரமப்பட உள்ளனர். ஆர்சிபி அணியில் உள்ள வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி, பிபிகேஎஸ் அணியில் உள்ள ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் கேப்டன் சாம் குரான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளனர். மே மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தான் தொடரைத் தொடர்ந்து, ஜூன் 4 ஆம் தேதி ஸ்காட்லாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது.

இங்கிலாந்து vs பாகிஸ்தான் டி20 அட்டவணை:

1வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 22, ஹெடிங்லி, லீட்ஸ்

2வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 25, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்

3வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 28, சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்

4வது டி20: இங்கிலாந்து v பாகிஸ்தான், மே 30, கியா ஓவல், லண்டன்

டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content