Site icon Tamil News

பயன்படுத்திய ஐபோன் வாங்க திட்டமிடுகின்றீர்களா? அவதானம்

பிரீமியம் போனான ஐபோன் வாங்க வேண்டும் என்ர ஆசை பலருக்கு இருக்கும். எனினும் புதிய ஐபோன் வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காததால் பழைய ஐபோனை வாங்க பலர் திட்டமிடலாம். எனினும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் போனை வாங்கிய பிறகு நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்.

புதிய ஐபோன் சீரிஸ் வந்தவுடன் பலரும் பழைய ஆப்பிள் ஐபோனை (Apple iPhone) விற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் . இதை பயன்படுத்திக் கொண்டு பலர் பழைய ஐபோனை வாங்குகிறார்கள். ஆனால் தாங்கள் செய்யும் சில தவறுகளால், பின்னர் வருந்தும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்களுக்கு நடக்காமல் இருக்க, செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளாலாம்

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், பழைய ஐபோனை (Smartphone) வாங்க பணம் செலுத்தும் முன், முதலில் நீங்கள் பழைய ஐபோன் மாடலில் சில முக்கியமான விஷயங்களைச் சரிபார்க்க வேண்டும்.

செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

IMEI எண்: பழைய ஐபோனை வாங்கும் முன், ஃபோனின் அமைப்புகள் என்னும் செட்டிங்க்ஸ் பிரிவுக்கு சென்று General > About என்பதற்குச் செல்லவும். இங்கே நீங்கள் IMEI எண்ணைக் காண்பீர்கள். ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த எண்ணைப் பார்வையிட்டு, ஃபோன் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட் ஐபோனா என்பதைச் சரிபார்க்கவும்.

டிஸ்பிளே நிலை: டிஸ்பிளே ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியம் பல சமயங்களில் போன் நழுவி கீழே விழுந்து திரை உடைந்து விடலாம். இதுபோன்ற சூழ்நிலையில், பணத்தை மிச்சப்படுத்த பலர் டூப்ளிகேட் டிஸ்ப்ளே பொருத்தியிருக்கலாம். இதனால், பழைய ஐபோன் வாங்கும் முன், நீங்கள் வாங்கும் போனில் உள்ள டிஸ்பிளே ஒரிஜினலா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

டிஸ்பிளே ஒரிஜினலா இல்லையா என்பதைக் கண்டறிய, தொலைபேசியின் அமைப்புகளில் True Tone அம்சத்தை பயன்படுத்தவும். இந்த அம்சம் வேலை செய்தால், டிஸ்ப்ளே அசல் என்பதை புரிந்து கொள்ளுங்கள், இந்த அம்சம் டூப்ளிகேட்டாக இருந்தால் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி நிலை: பழைய ஐபோனுக்கு பணம் செலுத்தும் முன், பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்கவும். பேட்டரியின் நிலையைப் பொறுத்து ஃபோன் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

போனில் உள்ள செட்டிங்ஸ்> பேட்டரி> பேட்டரி ஹெல்த் என்பதற்குச் செல்லவும், இங்கே பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா என்பதை அறியலாம். பேட்டரி ஆரோக்கியம் 80 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அந்த போனை வாங்குவது உசிதமல்ல. பேட்டரி நிலை 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான், பழைய ஐபோனை வாங்குவது உசிதமாக இருக்கும்.

Exit mobile version