Site icon Tamil News

இஸ்ரேலின் வடப்பகுதியில் உள்ள 14 சமூகங்களை வெளியேற்ற உத்தரவு!

நாட்டின் வடக்கில் உள்ள மேலும் 14 சமூகங்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட சமூகங்களின் பட்டியலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அங்கீகரித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு காஸாவில் போர் வெடித்ததில் இருந்து அப்பகுதி எல்லை தாண்டிய கடுமையான துப்பாக்கிச் சூடுகளை கண்டுள்ளது.

ஹமாஸுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிகளான  ஹிஸ்பொல்லாவுடன் ஒரு சாத்தியமான சண்டைக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் நாட்டின் எல்லையில் உள்ள சில பகுதிகளை மூடிய இராணுவ மண்டலங்களாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, இதனால் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி 20,000இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேறுவதாக இஸ்ரேல் கூறியது. அதேநுரம் எல்லையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 28 கிராமங்களில் உள்ள மக்கள் தெற்கே வெளியேறும்படி உத்தரவிட்டது.

Exit mobile version