ஜானகவுக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவது மற்றும் ஆணைக்குழுவின் அங்கத்துவம் தொடர்பான தீர்மானம் இன்று (24) பாராளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அங்கு தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.
இதன்படி, இனிமேல் அந்த ஆணைக்குழுவில் ஜனக ரத்நாயக்கவின் உறுப்புரிமை ரத்து செய்யப்படவுள்ளது.
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமை தொடர்பில் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எதிர்க்கட்சியில் இணைந்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.
குமார வெல்கம, வடிவேல் சுரேஷ் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை விசேட அம்சமாகும்.