இஸ்ரேலை யாரும் தடுக்க முடியாது – நெதன்யாகு
தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸா போரில் வெற்றி கிடைக்கும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்படுவதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில், ஹமாஸை முற்றிலும் அழிக்கும்வரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இஸ்ரேலை தடுக்க முடியாது என்றார்.
காஸா போர் தொடங்கி 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளனர் என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும் தொலைக்காட்சி உரையில் நெதன்யாகு குறிப்பிட்டார்.
(Visited 19 times, 1 visits today)