நல்லூர் கந்தசுவாமி கோவில் பூசாரிக்கு புகழாரம் சூட்டிய நிர்மலா சீதாராமன்

நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான விஸ்வ பிரசன்னா குருக்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பராட்டினார்.
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ என்றார். ஆலய மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பராட்டினார்.
நல்லூர் கந்தசுவாமி கோயில் 25 நாள் மஹோற்சவத்தின் போது நடைபெறும் ஒருமுகத் திருவிழாவில் விஸ்வ பிரசன்னா குருக்களின் கணீர் குரலில் கட்டியம் சொல்லப்படும். அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.