Site icon Tamil News

Samsung ஸ்மார்ட்போனில் புதிய வசதி!

Samsung நிறுவனம் அதன் புதிய திறன்பேசிகளில் உடனடி மொழிபெயர்ப்பு வசதியை இணைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது அந்த வசதி. அதன்மூலம் தொலைபேசியில் உரையாடுவோரின் குரலும் தட்டச்சிடும் வார்த்தைகளும் நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்கப்படும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான Sub Title எனப்படும் துணை வாசகச் சேவையை அனுமதிப்பது, நிறுத்துவது போல் மிக எளிமையானதாகப் புதிய வசதி இருக்கும் என்றது Samsung.

புதிய Galaxy வகைத் திறன்பேசிகளில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அந்த வசதி அறிமுகமாகும்.

ஆனால் எத்தனை மொழிகளில் அந்த வசதி கிடைக்கும் என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை.

Samsung அல்லாத வேறுவகைத் திறன்பேசியில் இருந்து ஒருவர் பேசுவதையும் Galaxy வகைத் திறன்பேசி மொழிபெயர்த்துத் தரும்.

அதன்மூலம் வேற்று மொழிக்காரர்களோடு உரையாடுவது மிகவும் எளிதாகும் என உலகின் ஆகப் பெரிய திறன்பேசி உற்பத்தி நிறுவனமான Samsung குறிப்பிட்டது.

அது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்குமெனத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version