Site icon Tamil News

பிரான்சில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்த புது எரிசக்தி..!

பிரான்சில், இதுவரை எங்கும் கண்டுபிடிக்கப்படாத அளவில் எரிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரான்சில், Lorraine என்னுமிடத்தில், Jacques Pironon மற்றும் Phillipe De Donato என்னும் இரண்டு அறிவியலாளர்கள் பூமியைத் தோண்டி மீத்தேன் வாயுவின் அளவை ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.அப்போது, எதிர்பாராவிதமாக பூமிக்கடியில் ஏராளம் வெள்ளை ஹைட்ரஜன் என்னும் வாயு இருப்பது தெரியவந்தது. இந்த வெள்ளை ஹைட்ரஜன், இயற்கை ஹைட்ரஜன், தங்க ஹைட்ரஜன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அதுவும், இந்த அளவுக்கு அதிக அளவில் உலகில் எங்குமே இந்த வெள்ளை ஹைட்ரஜன் கண்டுபிடிக்கப்படவில்லை. ஹைட்ரஜன், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் எஃகு தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு சாத்தியமான சுத்தமான எரிசக்தி ஆதாரமாகும்.

மேலும், மற்ற எரிபொருட்களைப் போல் எரியும்போது காற்றை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தாமல், ஹைட்ரஜன் எரியும் போது தண்ணீரை மட்டுமே வெளியாக்கும் என்பதால், இது சூரிய சக்தி அல்லது காற்றாலை ஆற்றல் மூலங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version