Site icon Tamil News

Tiktok தளத்தை தடை செய்யும் நேப்பாளம்

நேப்பாளத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக அதிகாரிகள் கூறும் நிலையில் Tiktok காணொளித் தளத்தைத் தடை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கோரிக்கைகள் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

செயலியை முடக்கும்படி இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேப்பாளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் Tiktok-இன் தொடர்பில் 1,600க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

Tiktok-யைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் Tiktok தளம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலந்து போன்ற மற்ற சில நாடுகளில் அரசாங்க ஊழியர்கள் தளத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை.

Exit mobile version