என் ஜாதகமும் நன்றாக இருக்கிறது-நவீன்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றதன் பின்னர் தொடர்ந்தும் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (19) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நவின் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ரணில் வெற்றி பெற்றால் நான் தொடர்ந்து ஆளுநராக இருப்பேன். என்பதை நினைவில் கொள்ளுங்கள். தோற்றால் அது வேறு கதை.
என் ஜாதகமும் நன்றாக உள்ளது. 21ம் திகதிக்கு பிறகும் நான்தான் ஆளுநர். இப்போது பிரதான வேட்பாளர்கள் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க உள்ளனர்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க இன்று கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சஜித் பிரேமதாச உண்மையில் தர்க்கரீதியாக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்று புரியவில்லை.
குறைந்த பட்சம் அனுரகுமார வந்தால் இதையெல்லாம் முன்னூற்று அறுபது டிகிரியாவது மாற்றிவிடுவேன் என்கிறார்.
ஆனால் சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? அனைத்தையும் தருவதாகச் சொல்கிறார்.
இவை அவரது தனிப்பட்ட சொத்தில் இருந்து கொடுக்கப்படுமா? இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது?” என கேள்வியெழுப்பினார்.