புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் மக்ஸ் – யூட்யூபை பின்பற்றும் X
சமீபத்தில் எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட டுவிட்டர் நிறுவனம் யூடியூப் பிளே பட்டன் போலவே, குறிப்பிட்ட இலக்கை அடையும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விருதுகளை வழங்க பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பின்தொடர்பவர்கள், பார்வைகள், மேலும் பல அளவீடுகளின் அடிப்படையில் படைப்பாளர்களுக்கு அங்கீகார விருது வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ட்விட்டர் வழங்கும் இந்த விருதுகள், கிரியேட்டர்கள் தங்களின் சாதனையைக் கொண்டாடி மகிழ்வதற்காக வழங்கப்படலாம் என்பது போல் தெரிகிறது.
இது எப்போது எதன் அடிப்படையில் வழங்கப்படும் என இன்னும் உறுதிப்பட தெரிவிக்கப்படவில்லை.
இவர்களின் இத்தகைய முயற்சி மற்ற சமூக வலைதளங்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ளும் ஒரு வழியாக இருக்கலாம். இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது.
அந்த தளத்தில் சமீப காலமாக கிரியேட்டர்களை ஈர்க்கவும், தக்க வைக்கவும் பல மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். அதன்படி கண்டன் கிரியேட்டர்களுக்கு தங்களின் ட்விட்டர் பதிவுகள் மற்றும் ரிப்ளைகளில் வரும் விளம்பரங்கள் மூலமாக, பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழியை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதற்கு ஒரு நபர் ட்விட்டர் ப்ளூவில் இணைந்து, கடந்த மூன்று மாதங்களில் பதிவிட்ட போஸ்டுகளுக்கு 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள்ப் பெற்றிருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்யும் நபர்களுக்கு கண்டன் கிரியேட்டர் அங்கீகாரம் வழங்கப்படும்.