அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி
1980 ஆம் ஆண்டு ஒரு கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில், டிஎன்ஏ சூயிங்கமில் (இனிப்பு மிட்டாய்) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க மாநிலமான ஓரிகானில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
மல்ட்னோமா மாகாண மாவட்ட வழக்கறிஞரின் அறிக்கையின்படி, ஜனவரி 15, 1980 அன்று 19 வயதான பார்பரா டக்கர், “ராபர்ட் ப்ளிம்ப்டனால் ஒரு வளாகத்தில் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் கடத்தி, பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார்.”
அவள் மவுண்ட் ஹூட் சமுதாயக் கல்லூரியில் மாணவி. மறுநாள் காலை, கல்லூரிக்கு வகுப்பிற்கு வந்த சக மாணவர்களால் திருமதி பார்பராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
60 வயதான அவர் கடந்த வாரம் முதல் நிலை கொலை மற்றும் நான்கு இரண்டாம் நிலை கொலை வழக்குகளில் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
மேலும் அவரது தண்டனையை மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.