அஸ்வெசும உதவி திட்டம் குறித்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!
அஸ்வெசும’ நலன்புரி திட்டம் குறித்து இதுவரை 188, 794 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 3304 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வார நாட்களில் பொதுமக்களும் 1924 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தங்களது கருத்துக்களை கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘அஸ்வெசும’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘அஸ்வெசுமா’ சமூக நலத் திட்டத்தின் இறுதிப் பயனாளிகள் பட்டியல் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்க முகவர்கள் ஊடாக குறித்த பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.