சிரியாவில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!
சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு ஆதரவான லெபனான் தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த தகவலை வெளியிட்டது.
சிரியாவில் ஈராக் மற்றும் ஜோர்டான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ தளம் மற்றும் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளம் ஆகியவை இவ்வாறு தாக்கப்பட்டன.
ஆனால் இந்த தாக்குதல்களை அதிகாரப்பூர்வமாக யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)