Site icon Tamil News

ஜெர்மனியில் தனி விமானங்களில் நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட அகதிகளை தனி விமானத்தில் அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்ற முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த கிழமை சக்சன் மாநிலத்தில் இருந்து 21 டிரினேசியா நாட்டை சேர்ந்த நிராகரிக்கப்பட்ட அகதிகளும், இதேவேளையில் டிரினேசியா நாட்டை சேர்ந்த குற்றவாளிகளும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பேர்லினில் இருந்து ஈராக் நாட்டை சேர்ந்தவர்களும் தனி விமானத்தில் ஈராக்குக்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 10 பேரும், கடந்த மாதம் 27ஆம் திகதி மேலும் 7 பேர் ஈராக் நாட்டுக்கு கடத்தப்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் ஈராக் நாட்டில் உள்ள சிறுபான்மை இனமான ஜெசிரர் என்ற இனத்தவர்கள் தாங்கள் அந்த ஈராக் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் பல வன்முறைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் இப்பொழுது நாடு கடத்தலுக்கு எதிரான முறையில் பேர்லினில் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரியவந்து இருக்கின்றது.

அவர்கள் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இந்த உண்ணாவிரதத்தை நடத்துவதற்காக பதிவு செய்துள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

Exit mobile version