Site icon Tamil News

Meta நிறுவனத்தின் புதிய முயற்சி – WhatsApp Channelஇல் அறிமுகமாகும் வசதி

Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது.

அந்தவகையில் அண்மையில் WhatsApp Channel என்கின்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. அதில் தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களை பின்தொடரமுடியும்.

Cricket பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என்று பலர் இதில் இணைந்துள்ளனர். இது One way broadcast Tool ஆகும். இதில் அவர்களுக்கு Reply செய்ய முடியாது. இந்த நிலையில் WhatsApp Channel வசதியில் Voice Notes மற்றும் Sticker வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

WhatsApp வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்பொழுது இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், Personal Chat போன்று Voice Notes மற்றும் Sticker ஐ அனுப்பக்கூடிய வகையில் இந்த வசதி அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Android 2.23.23.2க்கானWhatsApp Betaவில் இந்த வசதி சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் பிரபலங்கள் தங்களுடைய இரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டு பேச முடியும் அத்துடன் அதிக Followerகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

WhatsApp Channel மிகவும் தனிப்பட்ட வசதியாகும். இதன் மூலம் உங்களது Profile Photo அல்லது தொலைபேசி இலக்கம் என்பன பொது வெளியில் காண்பிக்கப்படாது.

Exit mobile version