Site icon Tamil News

பிரான்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!

பிரான்ஸ், தலைநகரைச் சுற்றியுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து  பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

பாரிஸ் விமான நிலையங்களில் பாதுகாப்பு ரோந்துகள் 40% அதிகரிக்கப்படும் என்றும் தேசிய ரயில்வே நிறுவனமான SNCF இன் ஊழியர்கள் 20% கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள அராஸ் நகரில் 20 வயது இளைஞன் ஒரு ஆசிரியரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, அக்டோபர் 13-ஆம் திகதி முதல் பிரான்ஸ் அதிக உஷார் நிலையில் உள்ளது.

இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version