சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலத்திற்கு ஆதரவளிக்க புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் பயிற்சியாளரின் உதவியோடு ஊழியர்கள் அவர்களின் தினசரி பயிற்சிவழி சிகிச்சையையும் வளர்ச்சியையும் கண்காணிக்கலாம்.
60 சதவீதம் வெளிநாட்டு ஊழியர்கள், தசை, எலும்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திப்பதாக மனிதவள அமைச்சு சொன்னது.
SATA CommHealth அமைப்பு புதிய திட்டத்தை நடத்துகிறது.
(Visited 21 times, 1 visits today)