கொழும்பில் பாரிய வீடமைப்பு மோசடி அம்பலம்!
கொழும்பு மாநகரில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற்று தருவதாக கூறி 150 கோடி ரூபாவை குழு ஒன்று மோசடி செய்துள்ளதாக ‘அத தெரண உக்குஸ்ஸா’ தகவல் வெளியிட்டுள்ளது.
கொம்பனித் தெரு மற்றும் மோதர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வழங்குவதாக கூறியே குறித்த குழு மக்களை ஏமாற்றியுள்ளது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு தரத்தில் உள்ளவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்தது.
இந்த குழுவினர் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கும் வரை நாம் அவதானத்துடன் இருப்போம்.
(Visited 11 times, 1 visits today)