ஆசியா

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது ( 98) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய்த்தொற்று ஏற்பட்டதால் தேசிய இதயநோய் மருத்துவமனையில் மகாதீர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முதுமைசார்ந்த உடல்நல பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மகாதீர். இதய நோய் தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பைபாஸ் ஆப்ரேசன் செய்யப்பட்டது.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தற்போதைய துணை பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மகாதீரால் கலந்துகொள்ள முடியவில்லை.எனவே, ஜூலை 19ம் திகதி விசாரணையை தொடர்வதாக நீதிபதி தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)
See also  9 மாத மகனைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட இஸ்ரேல் பெண்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content