உள்ளுராட்சி தேர்தல் : அநுரவின் போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

தேசிய மக்கள் சக்தியினால் இன்று(08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராகவே போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (07) இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கொடா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)