சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு : 14 பேர் உயிரிழப்பு!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
வனத்துறை அலுவலக கட்டப்பகுதியில் ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 5 பேரைக் காணவில்லை என்றும் அறவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.
தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த சிச்சுவானின் பெரும்பகுதி நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகிறது.
(Visited 13 times, 1 visits today)