Site icon Tamil News

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுப்போர் பயிற்சி – சீனா கடும் எதிர்ப்பு

தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதனால் அங்குள்ள நாடுகளிடையே ஒருவித பதற்றம் நிலவுகிறது. இந்தநிலையில் 2009ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்டு என்ற பெயரில் பயிற்சி நடத்தி வருகிறது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் இந்த பயிற்சியில் இணைந்துள்ளன.

அதன்படி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போது கூட்டுப்போர் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் எம்.1 ஆப்ராம்ஸ் என்ற 5 போர் டாங்கிகள், இந்தோனேசியாவின் 2 லியோபர்ட் டாங்கிகள் என பல்வேறு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

Australian and Indonesian forces deploy battle tanks in US-led combat drills amid Chinese concern
இதுகுறித்து இந்தோனேசிய ராணுவ செய்தித்தொடர்பாளர் ஜூலியஸ் விட்ஜோஜோனோ கூறுகையில், `ரோந்து பணியின்போது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதே இதன் முக்கிய நோக்கம்’ என தெரிவித்தார். ஆனால் இந்த கூட்டுப்போர் பயிற்சியை தனது நாட்டுக்கு அச்சுறுத்தலாக கருதி சீனா கடுமையாக எதிர்க்கின்றது. மேலும் தங்களது ராணுவ செல்வாக்கை கட்டுப்படுத்த நேட்டோவை போன்று ஒரு இந்தோ-பசிபிக் கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் சீனா குற்றம் சாட்டுகிறது.

Exit mobile version