யாழ்- கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், காணி மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்தன் குணதிலாக மற்றும் துறைசார் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.