சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை வேகமாக வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக தகவல்!
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சீனாவில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விட வேகமாக தங்கள் பணத்தை சீனாவிலிருந்து வெளியே அனுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனப் பொருளாதார வளர்ச்சி பலவீனம், குறைந்த வட்டி விகிதங்கள், அமெரிக்காவுடன் நிலவி வரும் புவிசார் அரசியல் மோதல் போன்றவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு குறித்து உலகின் கவனம் குவிந்துள்ளது.
ஆனால் தற்போது பல வர்த்தக நிறுவனங்கள் மாற்றுச் சந்தைக்கான திட்டங்களைத் தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில், சீனாவில் இருந்து வெளிநாட்டு முதலீடுகளில் 11.8 பில்லியன் டாலர் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
1988ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.