ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தக்கூடிய பதிலடி தாக்குதலில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடம் அதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேலைத் தற்காப்பதற்கான உதவி தொடரும் என்றபோதிலும் போரை விரும்பவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க விரும்புவதாகக் கூறிய இஸ்ரேல் அது எப்போது, எந்த அளவில் நடத்தப்படும் என்று குறிப்பிடவில்லை.
சிரியாவில் உள்ள தெஹ்ரான் தூதரகத்தின் மீது ஏப்ரல் முதலாம் தேதி நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேலைத் தாக்கியது.
தெஹ்ரான் தூதரகத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் பாய்ச்சிய ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்தான் ஆகிய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது.