Site icon Tamil News

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் ஒரு பகுதியை அழித்த இஸ்ரேலியப் படைகள்

காசா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையின் இதய நோய் பிரிவை இஸ்ரேல் அழித்துள்ளதாக ஹமாஸ் கூறுகிறது.

மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் நிரம்பி வழிவதாகவும், புதிதாகப் பிறந்த 37 குழந்தைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களினால் காசா பகுதியில் உள்ள மேலும் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைகளில் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

அதன்படி, காசா நகரில் உள்ள சில மருத்துவமனைகளை இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version