இஸ்ரேல் இராணுவம் சிரியா மீது தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் சிரியாவை நோக்கி தாக்குதல் நடத்தியதன் காரணமாக சிரியாவில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
இதன்படி, தாக்குதல் ஜெட் விமானங்களை பயன்படுத்தி, சிரிய இராணுவத்திற்கு சொந்தமான இராணுவ உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிரிய இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹமாஸுடன் இஸ்ரேல் நடத்தும் போர், பிராந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
இதன் மூலம் சிரியா மற்றும் ஈரானுடன் தொடர்புபட்டுள்ள லெபனானின் ஹிஸ்புல்லா குழுவுடன் நிலவும் பிரச்சனைகள் மேலும் வலுவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 7 times, 1 visits today)