காசாவில் மிகப் பெரிய சுரங்க பாதையை கண்டுப்பிடித்த இஸ்ரேல்!
போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களை மீறி காஸாவில் தனது தாக்குதலை மேற்கொண்டதால், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் Erez எல்லைக் கடவைக்கு அருகில் ஹமாஸின் மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை சிறிய வாகனங்கள் பயன்படுத்தும் அளவுக்கு பெரியதாக இருந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த சுரங்கப்பாதையானது பல ஆண்டுகளுக்கு முன்பு பல மில்லியன் டொலர் செலவில் ஹமாஸ் அமைப்பினர் கட்டியிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதில் தண்டவாளங்கள், மின்சாரம், வடிகால் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நுழைவாயில் Erez Crossing இலிருந்து 400 மீட்டர் (1,310 அடி) தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை அமைப்பு ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரரும் ஹமாஸின் கான் யூனிஸ் பட்டாலியனின் தளபதியுமான முகமது சின்வார் தலைமையிலான ஒரு திட்டமாக இருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.