சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்… 14 பேர் உயிரிழப்பு, 43 பேர் காயம்!
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வரகிறது.
இந்நிலையில், மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 43 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால், சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
(Visited 4 times, 1 visits today)