Site icon Tamil News

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்குமாறு ஈரான் வலியுறுத்தல்

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அவர் தெரிவித்தார். காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காசாவில் நடந்து வரும் இன அழிப்பை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் விரைந்து வலியுறுத்த வேண்டும். இஸ்லாமிய நாடுகள், சியோனிச ஆட்சி நடக்கும் இஸ்ரேலுடன் பொருளாதார ரீதியாக ஒத்துழைக்கக் கூடாது. காசா மக்கள் மீது யார் அழுத்தம் செலுத்துகிறார்கள் என்பதை இஸ்லாமிய உலகம் மறக்க கூடாது. அதில் வெறும் இஸ்ரேல் மட்டும் இல்லை. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு எதிராக நிற்கின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என அயதுல்லா அலி கமேனி தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்புக்கு நிதி மற்றும் ராணுவ ரீதியாக ஆதரித்து வழங்கி வரும் ஈரான், இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை வெற்றி என்று சொல்லியது. இருந்தாலும் அதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்தது.

Exit mobile version