iPhone 16 Proவில் இதுவரை இல்லாத அம்சங்கள்
ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபோன் 16 ப்ரோ வெர்ஷனில் ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்யும் என சொல்லப்படுகிறது. இதற்காகவே பிரத்தியேகமான ஏஐ அம்சத்தை உருவாக்கும் முயற்சியில் அந்நிறுவனம் களமிறங்கியுள்ளது.
2024 செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரியஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களை செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம். இந்த ஐபோன் 16 சீரியஸில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஐபோன் 16 மாடல்களில் முற்றிலும் புதிய டிசைனையும் அம்சங்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக புரோ மாடல் ஸ்மார்ட் ஃபோன்களில் ஏஐ அம்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவலின் படி, ஐபோன் 16 ப்ரோ மாடல் A18 pro சிப்செட்டில் வரும் என சொல்லப்பட்டுள்ளது. எனவே ஐபோன் 16 மாடல்கள் ஸ்மார்ட் ஃபோனை விட சிறப்பாக ஒரு குட்டி கம்ப்யூட்டர் போல செயல்படும்.
இதில் பயன்படுத்தப்படவுள்ள சிப்செட் மிகவும் கடினமான கம்ப்யூட்டிங் பணிகளையும் சிறப்பாக கையாளும் திறன் கொண்டதால், இதன் செயல்பாடு மற்ற சாதனங்களுடன் ஒப்பிடுகையில் மேம்படுத்தப்பட்டதாக இருக்கலாம். மேலும் இந்த சாதனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வருவதால், முற்றிலும் மாறுபட்ட பயனர் அனுபவத்தை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆப்பிள் சாதனங்களில் SIRI சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஏஐ அம்சத்தின் மூலமாக மேலும் சிறப்பான விஷயங்களை ஐபோன் 16ல் நாம் செய்ய முடியும். மேலும் ஐபோன் 15-ல் ஏற்பட்ட சில பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு, ஐபோன் 16 மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக இந்த மாடலுக்கு எனவே கூலிங் சிஸ்டம் உருவாக்கும் முயற்சியிலும் ஆப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது. இதனால் iphone விரும்பிகளுக்கு இந்த சாதனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.