பணவீக்கம் வீழ்ச்சியடைவதற்கு ஏற்ப வட்டி வீதங்களும் வீழ்ச்சியடையும் – நந்தலால் வீரசிங்க!
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு கரத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர் சந்தை வட்டிவீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு பணவீக்கமானது இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் தாம் ஏற்கனவே எதிர்வுகூறிய மட்டத்தை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.