வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் : 98 பேர் உயிரிழப்பு!
கடந்த மூன்று நாட்களில் வட இந்தியாவில் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு அதிகாரிகள் இன்று (18) தெரிவித்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீரிழப்பு, தலைச்சுற்றல், குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 500 பேர் வெப்பம் தொடர்பான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பல்லியாவில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
இந்திய வானிலை ஆய்வாளர்களால் 2021 இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் கடந்த 50 ஆண்டுகளில் 17,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.