ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவரும் தகவல்
ஜெர்மன் அரசாங்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜெர்மனியில் 49 யூரோ டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பயண அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.
ஜெர்மனி நாட்டில் தற்பொழுது பாவணையில் இருக்கும் 49 யுரோ பெறுமதியான பயண அட்டை எதிர்வரும் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
அதனால் ஜெர்மனியர்கள் போக்குவரத்தில் பயன்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பயண அட்டைக்கு மத்திய அரசாங்கமானது வருடாந்தம் 1.5 பில்லியன் யுரோக்களை வழங்குவதாக உறுதியளித்து இருந்தது. தற்பொழுது இந்த 1.5 பில்லியன் யுரோக்களை மத்திய அரசு இதற்கு வழங்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கின்றது.
இதன் காரணத்தினால் பல மாநில போக்குவரத்து அமைச்சர்கள் இந்த 49 யுரோ பயண அட்டையானது வருகின்ற வருடமும் நடைமுறையில் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள்.
இதற்கு காரணம் மத்திய அரசாங்கமானது இது வரையிம் 1.5 பில்லியன் யுரோக்களை வழங்குவது பற்றி இறுதியான முடிவை எடுக்கவில்லை என்ற கருத்து பரவி வருகின்றது.
இதன் காரணத்தினால் இந்த 49 யூரோ பயண அட்டையானது வருகின்ற வருடம் ஆட்டம் காணக்கூடிய சூழ்நிலை உள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது.