இந்திய மக்களவை தேர்தல் – கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் பாரதிய ஜனதாக் கட்சி
இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சம்மதித்துள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் பிரதிநிதி உட்பட 21 தலைவர்கள் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகப் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துன்னமு.
இந்திய நாடாளுமன்றத்துக்கான மொத்தம் 543 இடங்கள் உள்ளது. ஒரு கட்சியோ கூட்டணியோ ஆட்சியமைக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
240 இடங்களில் வென்ற அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க தெலுங்கு தேசம், ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியம். பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வென்றுள்ளது.