சிறுமியின் கருவைக் கலைப்பதற்கு இந்திய நீதிமன்றம் அனுமதி
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைப்பதற்கு இந்திய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மகாராஸ்டிரா மாநிலத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிறுமியின் கருவைக் கலைப்பதற்கான அனுமதியைப் பெற அவரது குடும்பத்தினர் மும்பை நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
எனினும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரு, 30 வார காலத்தைக் கடந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை குறிப்பிட்டு கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றின் தலைமை நீதியரசர் டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான குழுவினர், கருவைக் கலைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னதாக சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து கருவைக் கலைக்க முடியுமா? அவ்வாறு கருவைக் கலைத்தால் சிறுமிக்கு பாதிப்புக்கள் ஏற்படுமா? என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (22) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்¸ சியோன் மருத்துவமனையின் பரிந்துரையின்படி உயர்நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
(Visited 6 times, 2 visits today)