இந்தியா

500 ரூபாய் கள்ள நோட்டில் காந்திக்குப் பதில் ஹிந்தி நடிகர் படம் – இந்தியாவில் அதிர்ச்சி!!

ஹிந்தி நடிகர் அனுபம் கெர், இந்தியத் திரைப்படத் துறைக்கு ஒரு சொத்து என்று சொன்னால் அது மிகையில்லை.ஆனால், மோசடிக்காரர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

500 ரூபாய் கள்ள நோட்டுகளில் நடிகர் அனுபம் கெரின் படத்தை அவர்கள் அச்சிட்டுள்ளனர்.அவற்றின் மொத்த மதிப்பு 1.6 கோடி ரூபாய்.

அகமதாபாத்தில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் நபர் இருவர் அந்த நோட்டுகளைத் தந்தபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.அந்த நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Anupam Kher surprised as his image appears on fake currency notes, anupam kher, fake currency note, anupam kher fake currency photo, gujarat, fake currency in gujarat

கள்ள நோட்டுகளில் ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்பதற்குப் பதில் ‘ரீசோல் பேங்க் ஆஃப் இந்தியா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கள்ள நோட்டின் படம் இணையத்தில் பரவிய வேளையில் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதைப் பார்த்த நடிகர் அனுபம் கெர், “500 ரூபாய் நோட்டில் காந்தியின் படத்துக்குப் பதில் என் படமா?? எதுவும் நடக்கும்,” என்று வியப்பு தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content