Site icon Tamil News

ஜெர்மனியில் 63 வயதில் ஓய்வூதியம் பெறலாம்!

ஜெர்மனியில் 63 வயதில் ஓய்வு ஊதியம் பெறலாம் என முன்னாள் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

ஜெர்மன் நாட்டிலே 63 வயதில் சில நிபந்தனைகளின் படி ஓய்வு ஊதியத்தை பெற கூடிய வகையில் சட்டம் காணப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வகையான நடைமுறை மூலம் ஜெர்மன் அரசாங்கத்துக்கு 140 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

ஜெர்மனியின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெம்ஸ் பான் அவர்கள் இத்தகவலை தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில் இவ்வாறு வயது முதிர்ச்சி அடைவதற்கு முன்னமே அவர்கள் ஓய்வு ஊதியத்துக்கு செல்லுகின்றார்கள்.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அவர் கூறி இருக்கின்றார்.

அதாவது 63 வயதில் இவ்வாறு ஓய்வு ஊதியத்துக்கு செல்லும் பொழுது 10 தொடக்கம் 20 சதவீதமான பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இதன் காரணத்தினால் 63 வயதில் ஓய்வு ஊதியத்துக்கு செல்லுகின்ற நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்.

Exit mobile version