Site icon Tamil News

அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை

உலகிலேயே முதன்முறையாக தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சுமார் 34 வாரங்கள் தாயின் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்தது.

சுமார் 30 வாரங்களில் ஸ்கேன் செய்து பார்த்ததில்இ மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படிஇ பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை வெத்தியர்கள் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாகவும் 50 முதல் 60 சதவீதம் பேர் உடனடி நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபோன்ற குழந்தைகளின் இறப்பு விகிதம் சுமார் 40 சதவிகிதம் என்றும்இ அவர்களுக்கு மூளை பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வலுவான போக்கு இருப்பதாக மருத்துவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

Exit mobile version