Site icon Tamil News

அமெரிக்காவில் அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியாத நிலை – எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகத்துக்கும் குடியரசுக் கட்சியின் மக்களவைக்கும் இடையே இன்னமும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடனைக் குறைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் செலவைக் குறைக்க வேண்டும் என்று எதிர்தரப்புக் குடியரசுக் கட்சி சொல்கிறது. தற்போது அமெரிக்கக் கடன்வரம்பு 31 டிரில்லியன் டொலராக இருக்கிறது.

அந்த வரம்பை உயர்த்தாவிட்டால் அரசாங்கத்தை நடத்துவதற்குப் பணம் இருக்காது. அரசாங்கத்தின் செலவைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி சொல்வதை பைடன் நிர்வாகம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜூன் முதல்தேதிக்குள் இணக்கம் ஏற்பட்டாக வேண்டும். இணக்கம் மலர்ந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version