இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் இதுவரை விநியோகிக்க முடியாதுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மூன்றாம் தரப்பினர் ஊடாக அச்சிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று திணைக்களம் கூறியுள்ளது.
விநியோகிக்க முடியாத நிலையிலுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மாத்திரம், 6 முதல் 7 மாதங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)