Site icon Tamil News

அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இறக்குமதி செய்ய நடவடிக்கை!

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்  விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர். “அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர். இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று தலைமை தாங்கி நானும், இயக்குனர்களும் கண்டிப்பாக ரெய்டு நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version