இந்தியா செய்தி

சண்டையிட நான் தயார் – நேரம் இடம் கேட்டு சொல்லுங்கள் – சீமான் பதிலடி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்‌ நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வருகையின் போது அதனை எதிர்கொள்வது குறித்து மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசிப்பீர்களா? என கேள்வி கேட்டதற்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். அதனை செயல்படுத்த முடியாது. அது தேவையற்றது.

காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நாங்கள் உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்றால், பாராளுமன்றம், சட்டமன்றம் எதற்கு? எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமானால் நாட்டை ஆள்வது நீதியரசர்களா? பிரதமரா? என கேள்வி எழுப்பினார்.

See also  லண்டனில் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடந்த 100 திருமணங்கள் - 100 பவுண்டில் முடிந்த செலவு

கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது‌. ஒன்பதரை ஆண்டுகளாக மசோதா தாக்கல் செய்யாமல் தற்போது பெண்களுக்கு 33% ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருப்பது ஏன், இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தலை வைத்து கொண்டு பெண்கள் மீது உங்களுக்கு ஏன் திடீர் அக்கறை என்றார்.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் எங்களுடைய வளங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள்.

ஆனால் தண்ணீரை வழங்க மறுக்கிறீர்கள். கேட்டால் எங்களுக்கே போதிய அளவில் தண்ணீர் இல்லை என கூறுகிறீர்கள். இதை ஏன் யாரும் கேட்பதில்லை, நாங்கள் கேட்டால் எங்களை பாசிச வாதிகள் என கூறுகின்றனர்.

நீங்கள் அறிவாளிகளா? எங்களை பார்த்தால் பைத்தியகாரர்களாக தெரிகிறதா? என்றார். நாங்களும் இனிமேல் இப்படி தான் செய்வோம், நெய்வேலி மின்சார மேலாண்மை வாரியம், மின்சார ஒழுங்காற்று குழு அமைத்து இந்த ஆட்டத்தை நான் ஆடி காட்டவில்லை என்றால் நான் பிரபாகரனின் மகன் இல்லை என ஆவேசமடைந்தார்.

See also  இஸ்ரேலில் தாக்குதலில் 3 நாட்களில் 40க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலி

மேலும், தமிழர் முன்னேற்றம் படை தலைவர் வீரலட்சுமியின் கணவர் பாக்ஸிங்கிற்கு அழைத்தது குறித்து கேட்டபோது, அவர் பகலில் பேசினால் பாக்ஸிங்கிற்கு போகலாம், ஆனால் அவர் 7-மணிக்கு மேல் பேசுகிறார். அவர் அதனை பதிவு செய்வது தெரிகிறது.

அதனை வெளியிட்டு இதுபோன்ற கேள்விகள் வரும் என்பதால் தான் செல்போனை அணைத்தேன். அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அதனை எதிர்கொள்கிறேன்.

அவரிடம் கேட்டு சொல்லுங்கள் இடம், நேரம் சொன்னால் எப்போது வேண்டுமானாலும் வருவார் என கூறுங்கள் என்றார். முதலில் என்னிடம் நேரில் வந்து நில்லு, அப்பறம் சண்டை போடலாம் என தெரிவித்தார்.

மேலும், இதுபற்றி பேசும் போது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா? சிரித்து விட்டு போங்கள் என பேசினார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content