மெக்சிகோவை உலுக்கிய சூறாவளி – 27 பேர் பலி – 4 பேர் மாயம்
மெக்சிகோவை பாதித்த ஓடிஸ் சூறாவளி காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரபல சுற்றுலா தலமான அகாபுல்கோவில் உள்ள 80% ஹோட்டல்கள் இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூறாவளியால் அகாபுல்கோ கடற்கரை ரிசார்ட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.
சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)