PDFஇல் டிஜிட்டல் Sign போடுவது எப்படி?
பி.டி.எஃப்-ல் கையெழுத்திடுவது எப்போதும் சிரமமான விஷயம் தான். அதை பிரிண்ட் எடுத்து அதில் கையெழுத்திட்டு ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். ஆனால் அடோப் அக்ரோபேட் மொபைல் வெர்ஷன் பயன்படுத்தி பி.டி.எஃப்-ல் டிஜிட்டல் சைன் போடலாம்.
1.அடோப் அக்ரோபேட் மொபைலில் PDF-ல் கையொப்பமிடுவது எப்படி? 1. உங்கள் மொபைலில் அடோப் அக்ரோபேட் ( Adobe Acrobat) டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2. அடுத்து எந்த பி.டி.எஃப்-ல் கையெழுத்திட வேண்டுமே அதை ஓபன் செய்யவும். 3. இப்போது கீழே உள்ள டூல் பாரில் ‘Fill and Sign’ ஆப்ஷன் கொடுத்து பென் போன்ற ஐகானை கிளக் செய்யவும்.
4. இப்போது அதைப் பயன்படுத்தி கையெழுத்திடவும். அல்லது உங்களிடம் ஏற்கனவே கையெழுத்து போட்ட போட்டோ இருந்தால் அதை பயன்படுத்தலாம்.
5. இதை செய்த பின் வலப்புறத்தில் உள்ள ‘Done’ என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.