ஜெர்மனியில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை
ஜெர்மன் அரசாங்கமானது எரிபொருளுக்கான விலையேற்றத்தை தடுப்பதற்கான சில சட்டங்களை நிறைவேற்றி இருந்தது.
ஜெர்மனியில் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்கும் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருட்களுக்கான விலையேற்றத்தை தடுக்கும் இந்த சட்டமானது சில மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாக கூடியதாக இருந்தது.
அதாவது இந்த சட்டத்தின் பிரகாரம் இந்த மாதம் 31ஆம் திகதி தொடக்கம் இந்த விலையேற்றமானது நடைபெற கூடாது என்று இந்த சட்டம் கூறி இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஜெர்மன் அரசாங்கமானது எரிபொருளுக்கு விலையேற்ற கூடாது என்ற நிலைப்பாட்டை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் எரிபொருளுக்கான மேலதிக வரியை அறவிடவது இல்லை என்றும் இந்த மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் முன்னதாகவே முடிவெடுக்கப்பட்டு இருந்து.
தற்பொழுது 1.11.2023 இல் இருந்து எரிப்பொருட்களுக்கான மேலதிக வரி அறவிடப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது.