GCE O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் கணனிமயமாக்கும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
14 மில்லியன் பதிவுகள் கணினிமயமாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மே 29 முதல் ஜூன் 08 வரை நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)