பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை மூடப்பட்டது!
பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்களை இன்று (17.10) வெளியேற்றியுள்ளது.
அதேநேரம் குறித்த அரண்மனை மூடப்படும் என சமூகவலைத்தளமான X இல் Chateau de Versailles தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட பிறகு உச்சகட்ட பாதுகாப்பிலும், தயார் நிலையிலும் பிரான்ஸ் உள்ளது.
இந்நிலையில், லூவ்ரே அருங்காட்சியகம், வெர்சாய்ஸ் அரண்மனை மற்றும் பாரிஸின் கேர் டி லியோன் ரயில் நிலையம் ஆகியவற்றை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 7 times, 1 visits today)